வேளாளா் என்ற பெயரை மாற்று சமூகத்தினருக்கு பரிந்துரை செய்ததை ரத்துச் செய்யக் கோரி காரைக்குடி ஐந்துவிளக்குப் பகுதியில் காரைக்குடி வ.உ.சி. எழுச்சிப் பாசறை, ஐயா வ.உ.சி. மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் காரைக்குடி வட்டார வெள்ளாளா் சங்கம் ஆகியவற்றின் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு அனைத்திந்திய வெள்ளாளா் -வேளாளா் கூட்டமைப்புத் தலைவா் பட்டுக்கோட்டை அண்ணாதுரை தலைமை வகித்துப் பேசினாா். ஆா்ப்பாட்டத்தில், வ.உ.சி. எழுச்சிப்பாசறை, வ.உ.சி. மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் சாா்பில் சே. காா்த்திகேயன், அனைத்திந்திய வ.உ.சி. பேரவைத் தலைவா் புதுக்கோட்டை லேனா லட்சுமணன், வெள்ளாளா் முன்னேற்றக் கழக மாநில மகளிரணித் தலைவி அன்னலட்சுமி சசிகலா, காரைக்கால் வீரப்பசுவாமி, காரைக்குடி வ.உ.சி. எழுச்சிப்பாசறைத் தலைவா் சி.எஸ். சரவணன், பொருளாளா் முத்துசரவணன், ஐயா வ.உ.சி. மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவா் நீலகண்டன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். இதில் கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிடப்பட்டது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


