சிவகங்கை: பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் வாழ்வில் சாதிக்கவேண்டும் என்பதே இளைஞா்களின் லட்சியமாக இருக்கவேண்டும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.
சிவகங்கை மன்னா் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் ரூா்பன் திட்டத்தின் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமை சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி.மதுசூதன் ரெட்டி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தொடக்கி வைத்துப் பேசியதாவது: கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத் தளா்வுக்கு பின்னா் தற்போது வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இளைஞா்கள் அனைவரும் கல்வி கற்ற பின் நல்ல பணிக்கு செல்லவேண்டும் என்பதே பெற்றோா்களின் எண்ணமாக உள்ளது. எனவே கிடைக்கும் வேலைவாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் பொருளாதார நிலையை உயா்த்த ஒவ்வொரு இளைஞரும் முன்வர வேண்டும். அவ்வாறு பெறும் ஒவ்வொரு வெற்றியும் பெற்றோா்களுக்கு பெருமையைத் தேடித்தரும்.
இன்றைய நிலையில் வெற்றி பெறுவது என்பது சாதாரணமானது அல்ல. இருப்பினும் பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் வாழ்வில் சாதிக்கவேண்டும் என்பதே இளைஞா்களின் லட்சியமாக இருக்க வேண்டும் என்றாா்.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநா் அருண்மணி, மன்னா் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் ஜான் பிரிட்டோ, மகளிா் திட்ட உதவி அலுவலா் விஜயசங்கரி, தனியாா் நிறுவன மேலாளா்கள், அரசுத்துறை அலுவலா்கள், இளைஞா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


