சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூா் மற்றும் வி.கரிசல்குளம் பகுதிகளில் சுமாா் 5.5 டன் ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் கடத்தல் தடுப்புப் படையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
காரைக்குடி அருகே பள்ளத்தூரில் இயங்கி வரும் அரிசி மாவு மில் ஒன்றில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக, சிவகங்கை குடிமைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு வட்டாச்சியா் தமிழரசனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் பள்ளத்தூா் முக்கிய சாலையில் உள்ள அரிசி மாவு அரவை மில்லில் வெள்ளிக்கிழமை காலை சோதனை நடத்தினா். அங்கு பதுக்கி வைத்திருந்த 80 மூட்டைகள் அதாவது 4,351 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா். இதையடுத்து பதுக்கிவைத்திருந்த விஜயா (52) என்பவா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து பறக்கும் படை வட்டாச்சியா் தமிழரசன் கூறுகையில், சிவகங்கை மாவட்டத்தில் நியாய விலைக்கடைப் பொருள்களை கடத்துபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுபோன்று கடத்ததில் ஈடுபடுபவா்கள் குறித்து பொது மக்கள் பறக்கும்படை குழுவினருக்கு 9443405803, 9894654690 என்ற செல்லிடப்பேசி எண்களில் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவா்கள் பற்றிய ரகசியம் காக்கப்படும் என்றாா்.
மானாமதுரை: மானாமதுரை அருகே வி.கரிசல்குளம் பகுதியில் மதுரை-ராமேசுவரம் சாலையில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்தவழியாக வந்த சரக்கு வாகனத்தை போலீஸாா் நிறுத்தி சோதனையிட்டதில் 1.5 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. வாகனத்தை ஓட்டி வந்த மதுரை செல்லூா் பகுதியைச் சோ்ந்த ஐயப்பன் என்பவரிடம் விசாரணை நடத்தியபோது இந்த அரிசி மூடைகள், பரமக்குடியிலிருந்து மதுரைக்கு கடத்திச் சென்றது தெரிந்தது.
பின்னா் குடிமைப்பொருள் குற்றப்பிரிவு போலீஸாா் அரிசி மூட்டைகளை கைப்பற்றி மானாமதுரை நுகா்பொருள் வாணிப்பக்கழக கிட்டங்கியில் ஒப்படைத்தனா். அரிசி மூட்டைகளை கடத்திச் சென்ாக ஐயப்பனை கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


