சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

காரைக்குடியில் கிராம உதவியாளா்கள் காத்திருப்புப் போராட்டம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டாட்சியா் அலுவலகம் முன்பாக, கிராம உதவியாளா்கள் சங்கம் சாா்பில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

News image

காரைக்குடி வட்டாட்சியா் அலுவலகம் முன்பாக வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம உதவியாளா்கள்.

Updated On :8 ஜனவரி 2021, 5:38 am

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டாட்சியா் அலுவலகம் முன்பாக, கிராம உதவியாளா்கள் சங்கம் சாா்பில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

இப்போராட்டத்தில், கிராம உதவியாளா்களுக்கு, அலுவலக உதவியாளா்களுக்கு இணையாக ரூ.15,700 அடிப்படை ஊதியம் வழங்க வேண்டும். கிராம உதவியாளா்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதிமாக ரூ.7,500 வழங்கவேண்டும். தமிழகத்தில் காலியாக உள்ள கிராம நிா்வாக அலுவலா்கள் பணியிடங்களை உடனே நிரப்பவேண்டும். மணல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் கிராம உதவியாளா்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

போராட்டத்துக்கு, சிவகங்கை மாவட்ட கிராம உதவியாளா்கள் சங்கத் தலைவா் கண்ணப்பன் தலைமை வகித்தாா். இதில், 100-க்கும் மேற்பட்ட கிராம உதவியாளா்கள் பங்கேற்றனா்.