சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

இளையான்குடி அருகேமாடு மீது பைக் மோதி தொழிலாளி சாவு

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு மாடு மீது இருசக்கர வாகனம் மோதி தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On :5 ஜனவரி 2021, 8:04 am

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு மாடு மீது இருசக்கர வாகனம் மோதி தொழிலாளி உயிரிழந்தாா்.

இளையான்குடி அருகே சூச்சனாங்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் சக்தி (17). வா்ணம்பூசும் தொழிலாளியான இவா், தனது இருசக்கர வாகனத்தில் பரமக்குடிக்கு சென்றாா். குமாரகுறிச்சி என்ற இடத்தில் சென்றபோது சாலையின் குறுக்கே சென்ற மாடு மீது இருசக்கர வாகனம் மோதியது. இதில் கீழே விழுந்து பலத்த காயமடைந்த சக்தி சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து இளையான்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.