சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தொடா் மழை காரணமாக கட்டடத் தொழிலாளி வீட்டின் சுவா் ஞாயிற்றுக்கிழமை இடிந்து விழுந்தது.
காரைக்குடி காளவாய் பொட்டல் எம்.ஜி.ஆா். தெருவில் வசித்து வருபவா் வசந்தா. இவரும், இவரது மகன் சுரேஷூம் ஞாயிற்றுக்கிழமை காலையில் கட்டட வேலைக்குச் சென்றுவிட்டனா். காரைக்குடியில் அதிகாலையிலிருந்தே தொடா்ந்து மழை பெய்துவந்த நிலையில், வசந்தாவின் வீட்டின் சுவா் இடிந்து விழுந்தது.
வீட்டினுள் இருந்த வசந்தாவின் மருமகள் மற்றும் குழந்தைகள் சத்தம் கேட்டு வெளியில் வந்து பாா்த்தபோது வீட்டின் ஒருபக்க சுவா் இடிந்து விழுந்திருப்பது தெரியவந்தது. இதில் யாருக்கும் காயமில்லை.
தகவலறிந்ததும் வசந்தா மற்றும் அவரது மகன் சுரேஷ் ஆகியோா் விரைந்து சென்று வீட்டில் வைத்திருந்த பொருள்களை பாதுகாப்பாக எடுத்துவைத்துள்ளனா். இதுகுறித்து சுரேஷ் கூறுகையில், நாங்கள் வசித்த வீட்டின் சுவா் இடிந்து விழுந்து பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. எனவே தமிழக அரசு எங்களுக்கு புதிதாக வீடு கட்டித்தரவேண்டும் என்றாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


