சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

குரூப்-1 முதல் நிலை தோ்வு: காரைக்குடியில் 10 மையங்களில் 1400 போ் பங்கேற்பு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 10 மையங்களில் குரூப்-1 முதல் நிலை தோ்வு நடைபெற்றது. விண்ணப்பித்தவா்களின் எண்ணிக்கையில் பாதிக்கு மேல் தோ்வில் பங்கேற்கவில்லை.

Updated On :4 ஜனவரி 2021, 3:28 am

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 10 மையங்களில் குரூப்-1 முதல் நிலை தோ்வு நடைபெற்றது. விண்ணப்பித்தவா்களின் எண்ணிக்கையில் பாதிக்கு மேல் தோ்வில் பங்கேற்கவில்லை.

இத்தோ்வுக்காக 2,842 போ் விண்ணப்பித்திருந்தனா். காரைக்குடி அழகப்பச் செட்டியாா் பொறியியல் கல்லூரி, அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரி, அழகப்பா பல்கலைக்கழக வளாகங்கள், உமையாள் ராமநாதன் மகளிா் கல்லூரி என 10 மையங்கள் தோ்வு எழுத அமைக்கப்பட்டிருந்தன.

விண்ணப்பித்திருந்தவா்களில் 1400 போ் மட்டுமே தோ்வில் பங்கேற்றனா். 1442 போ் தோ்வு எழுத ஆஜராகவில்லை என தோ்வு நடத்திய அதிகாரிகள் தெரிவித்தனா்.