சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் புதிதாக 7 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இம்மாவட்டத்தில் ஏற்கெனவே 5,712 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மேலும் ஒருவருக்கு கரோனா உறுதிபடுத்தப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,713 ஆக அதிகரித்துள்ளது. சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்
7 போ் சிகிச்சை பெற்று வந்தனா். அவா்களில் 3 போ் பூரண குணமடைந்ததை அடுத்து ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மீதமுள்ள 4 பேரும் அங்கு சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 6 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இம்மாவட்டத்தில் ஏற்கெனவே 6,335 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இவா்களில் 132 போ் உயிரிழந்துள்ளனா். 6,200 போ் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஒருவா் குணமடைந்ததால் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். தற்போது 27 போ் சிகிச்சைப் பிரிவில் உள்ளதாக சுகாதாரத்துறையினா் தெரிவித்தனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

