மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சராக டாக்டர் இ.எம். சுதர்சன நாச்சியப்பன் பதவியேற்ற பின்னர் மதுரை, சிவகங்கை மாவட்டங்களுக்கு சனிக்கிழமை (ஜூன் 22) வருகை தருகிறார். புதுதில்லியிலிருந்து காலை 6 மணிக்கு விமானம் மூலமாக புறப்பட்டு மதியம் 2 மணிக்கு மதுரை வருகிறார். 3 மணிக்கு மதுரை லேக் பகுதியில் உள்ள தனது அலுவலகத்திற்கு வந்து பொதுமக்களைச் சந்திக்கிறார். மாலை 4 மணிக்கு சிவகங்கை மாவட்டம் அம்மாச்சிப்பட்டி, அலவாக்கோட்டை பகுதிக்கும், மாலை 5 மணிக்கு சிவகங்கையில் சத்தியமூர்த்தி தெருவில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் சந்திப்பும், மாலை 6.30 மணிக்கு மானாமதுரை ரயில் நிலையத்தில் நடைபெறவுள்ள சிலம்பு விரைவு ரயில் துவக்க விழாவிலும் அமைச்சர் பங்கேற்ற பின் மதுரை சென்று இரவு தங்குகிறார். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு கார் மூலம் கோயம்புத்தூருக்குச் செல்கிறார். இத்தகவலை அமைச்சரின் தனி செயலர் எஸ்.ஒய். பழனியப்பன் தெரிவித்துள்ளார்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

