சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தெரிந்து கொள்ளுங்கள்...

மனிதனின் மூளையை எட்டு எலும்புகள் பத்திரமாக பாதுகாக்கின்றன. மூளை மிகவும் அதிகமாக வேலை வாங்குவது நம் கைகளில் உள்ள கட்டை விரல்களைதான்.

Updated On :21 ஜூன் 2013, 8:16 pm

தெரிஞ்சுக்கோ..

• ஒரு மனிதனுக்கு சராசரியாக ஒரு நாளைக்கு ஒரு கிலோ உணவும், 1 1/2 லிட்டர் தண்ணீரும் தேவை.

• மனிதனின் மூளையை எட்டு எலும்புகள் பத்திரமாக பாதுகாக்கின்றன. மூளை மிகவும் அதிகமாக வேலை வாங்குவது நம் கைகளில் உள்ள கட்டை விரல்களைதான்.

• ஒரு மனிதன் தன் ஆயுட்காலம் முழுவதும் துப்பும் எச்சில் இரண்டு பெரிய நீச்சல் குளங்களை நிரப்பும் அளவிற்கு இருக்கும்.

• உடல் எலும்புகளில் நான்கில் ஒரு பங்கு கால்களில் உள்ளது.

• மனித உடலில் ஒரு நிமிடத்திற்கு 30 கோடி செல்கள் இறந்து போகின்றன.
 
• கருப்பு நிறம் கொண்டவர்களைவிட பொன்னிற மேனி கொண்டோருக்குத்தான் உடலில் முடி அதிகமிருக்கும்.
-ஜி.அருள்குமார், மன்னார்குடி.

ஒருவரிச் செய்திகள்

• புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் புனைப் பெயர்களுள் ஒன்று - வழிப்போக்கன்.
 
• உலகப் புகழ் பெற்ற பார்பி பொம்மையைப் படைத்தவர் ரூத் ஹேன்ட்லர் எனும் பெண்மணி ஆவார்.
 
• சுவாசிக்காமல் வாழும் உயிரினம் ஈஸ்டு எனும் நுண்ணுயிரி ஆகும்.

• உலகிலேயே மிகப்பெரிய பொம்மை அருங்காட்சியகம் தில்லியிலுள்ள "இன்டர்நேஷனல் டாய்ஸ் மியூசியம்' ஆகும்.

• முட்டையிட்டுக் குஞ்சு பொரித்துப் பால் கொடுக்கும் ஒரே உயிரினம் ஆஸ்திரேலியாவிலுள்ள ப்ளாட்டிபஸ் ஆகும்.

கடல் செய்திகள்
• நமது பூமியின் மேடான இரு பக்கங்களை நோக்கி சூரியனும் நிலவும் கடலை இழுப்பதால்தான் உயர்வாகவும் தாழ்வாகவும் அலைகள் எழும்பி கடல் உள்ளும் வெளியுமாக அலைபாய்கிறது.

• அனைத்து கடலோரக் கரைகளையும் ஒன்றிணைத்து நேராக்கினால் பூமியை 13 முறை சுற்றி வளைக்கமுடியும்.
 
• பெரும்பாலும் கடற்கரை மணல், மஞ்சளாகவோ வெள்ளையாகவோதான் இருக்கும். சில இடங்களில் எரிமலை குழம்பாகவோ அல்லது கரியினாலோ ஆகியிருந்தால் அம்மணல் கருப்பாக இருக்கும்.

• சீற்றமான கடல் அலைகள் கரையை நோக்கிப் பாயும் போது அந்த அலைகளின் மேலிருக்கிற வெண்மையான நுரை, பார்ப்பதற்கு வெள்ளை குதிரைகள் கடலில் நீந்துவது போல் இருக்கும்.

• நமது மெரீனா கடற்கரைதான் உலகிலேயே இரண்டாவது நீளமான கடற்கரை ஆகும்.


மின்னல் செய்திகள்

• மேகத்தினுள் எப்போதாவது வலிமையான காற்று நுழைந்தால் அது வேகமாக சுற்றிலும் உள்ள நீர்த்துளிகளுடன் மோதும். அப்போது அவை ஒன்றோடு ஒன்று பலமாக மோதி படபடவென வெடித்து நிலையான மின்சாரத்தை உண்டாக்கும். அவையே திடீரெனத் தோன்றும் மின்னல் கோடுகள் ஆகும்.

• மின்னல் நாம் நினைப்பது போல் கோடு வடிவில் மட்டும் தோன்றுவதில்லை? அது கிளை விட்ட வடிவிலும், தாள், நாடா மற்றும் பந்து வடிவிலும் தோன்றும். பந்து மின்னல் என்பது தீப்பந்து போலிருக்கும். சில இடங்களில் மக்கள் பந்து மின்னல்கள் வீட்டினுள் மிதந்து சென்று மோதுவதைப் பார்த்துள்ளனர்.
- தீபிகா, தஞ்சை.

கழுதைப் புலி - சில தகவல்கள்

• மேற்கு ஆசியா, கிழக்கு ஆப்பிரிக்கா ஆகிய இடங்களின் கழுதைப் புலிகள் மிகுதியாகக் காணப்படுகின்றன.
 
• கழுதைப் புலிகளில் 3 வகைகள் உண்டு. பழுப்பு நிற கழுதைப் புலி, புள்ளிக் கழுதைப் புலி, கோடு கழுதைப் புலி ஆகியவையாகும். மூவகைக் கழுதைப் புலிகளில் புள்ளி கழுதைப் புலி உண்டாக்கும் பல ஒலிகளில் மனித சிரிப்பொலி போன்ற ஒலியும் ஒன்றாகும்.

• கழுதைப் புலிகள் சிங்கம், பெரிய விலங்குகள் உண்டுவிட்டு போட்ட எஞ்சிய உணவையே உண்ணுகின்றன.
 

பாராசூட் கண்டுபிடித்தது
எப்போது தெரியுமா?

• 1480-ஆம் ஆண்டே பாராசூட் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. ஆனால் மனிதன் இதை நன்கு பயன்படுத்த ஆரம்பித்தது 400 ஆண்டுகள் கழித்துதான்.

• எதிரிகளின் மண்டை ஓடுகளை மதுக்குப்பிகளாகப் பயன்படுத்திய பயங்கரமான ரோமானியப் பேரரசர் காலிகூலா என்பவர்.
-முக்கிமலை நஞ்சன்