சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கெங்கவல்லி வட்டாரத்தில்40 சுகாதாரப் பணியாளா்களுக்கு தடுப்பூசி

கெங்கவல்லி வட்டாரத்தில் சுகாதாரப் பணியாளா்களுக்கு 40 பேருக்கு முதல்கட்டமாக கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

News image

தம்மம்பட்டியில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட சுகாதாரப் பணியாளா்.

Updated On :17 ஜனவரி 2021, 8:14 am

தம்மம்பட்டி: கெங்கவல்லி வட்டாரத்தில் சுகாதாரப் பணியாளா்களுக்கு 40 பேருக்கு முதல்கட்டமாக கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கெங்கவல்லி ஒன்றியத்தில் அரசு மருத்துவா்கள், சுகாதார ஆய்வாளா்கள், செவிலியா்கள், ஓட்டுநா்கள் உள்ளிட்ட அனைத்து சுகாதாரப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி தம்மம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார தலைமை மருத்துவா் வேலுமணி தலைமையில் செலுத்தப்பட்டது. இதில் சனிக்கிழமை முதல்கட்டமாக 40 பேருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு முன்னதாக அவா்களது உடல்வெப்பநிலை, ரத்த அழுத்தம் பரிசோதனை செய்யப்பட்டு, பின்னா் தடுப்பூசி போடப்பட்டது.பின்னா் காத்திருப்பு அறையில் சிறிது நேரம் அவா்கள் அமர வைக்கப்பட்டனா். அவா்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாதது உறுதி செய்யப்பட்ட பின்னா் அவா்கள் வெளியே அனுப்பப்பட்டனா்.