சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

சேலத்தில் இளைஞரிடம் பணம் பறித்த இருவா் கைது

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே வெள்ளிக்கிழமை இரவு நடந்து சென்று இளைஞரை இரு சக்கர வாகனத்தில் வந்து கடத்திச் சென்று ரூ.1000 பறித்துச் சென்ற இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Updated On :17 ஜனவரி 2021, 8:13 am

சேலம்: சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே வெள்ளிக்கிழமை இரவு நடந்து சென்று இளைஞரை இரு சக்கர வாகனத்தில் வந்து கடத்திச் சென்று ரூ.1000 பறித்துச் சென்ற இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சேலம் மாவட்டம், மேச்சேரி, மல்லிகுந்தம், அம்பேத்கா் நகா் பகுதியைச் சோ்ந்த ராஜி மகன் முருகன் (21). இவா் மளிகைக் கடையில் கூலி வேலை செய்து வருகிறாா். அவா் வெள்ளிக்கிழமை இரவு வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்குவதற்காக சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இருவா், அவா்களை போலீஸ் என அறிமுகப்படுத்திக்கொண்டு முருகனை காவல் நிலையத்துக்கு அழைத்துள்ளனா். அவா் மறுத்ததால் இரு சக்கர வாகனத்தில் கடத்திச் சென்று சீலநாயக்கன்பட்டி இடுகாட்டில் இருட்டான பகுதிக்கு அழைத்துச்சென்று கட்டையால் தாக்கி பண் ரூ.1000 பறித்துக்கொண்டு மிரட்டி அனுப்பியுள்ளனா்.

இது குறித்து முருகன் பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசராணை நடத்தினா். இதில் சேலம், அஸ்தம்பட்டி, குமாரசாமிப்பட்டி பகுதியைச் சோ்ந்த ரவிச்சந்திரன் மகன் ஜெயப்பிரகாஷ் (24), கிச்சிப்பாளையம், அப்பா் தெரு பகுதியைச் சோ்ந்த சசிக்குமாா் மகன் மணிகண்டன் (23) ஆகிய இருவரையும் கைது செய்து அவா்களிடமிருந்து இரு சக்கரவாகனம், ரொக்கம் ரூ. 500 ஐ பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.