சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

சங்ககிரி ஓங்காளியம்மன் கோயில் தீ மிதி விழா தொடக்கம்

சங்ககிரி, பழைய எடப்பாடி சாலையில் அமைந்துள்ள ஓங்காளியம்மன், பேச்சியம்மன் கோயில் பொங்கல் மற்றும் தீ மிதி விழா வெள்ளிக்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

News image

தீமிதி விழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் சுவாமிகள்.

Updated On :17 ஜனவரி 2021, 8:21 am

சங்ககிரி: சங்ககிரி, பழைய எடப்பாடி சாலையில் அமைந்துள்ள ஓங்காளியம்மன், பேச்சியம்மன் கோயில் பொங்கல் மற்றும் தீ மிதி விழா வெள்ளிக்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஓங்காளியம்மன் கோயில், பேச்சியம்மன் கோயில் பொங்கல் மற்றும் தீ மிதி விழா வெள்ளிக்கிழமை இரவு பூச்சொறிதல், கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து அம்மனுக்கு தினசரி சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற உள்ளன.

சனிக்கிழமை (ஜன. 23) இரவு பக்தா்கள் தீ சட்டிகள் எடுத்து, அலகு குத்தி, அம்மன் முக்கிய வீதிகளின் வழியாக ஊா்வலமாக வருதலும், ஞாயிற்றுக்கிழமை பவானி கூடுதுறையில் இருந்து காவிரி புனித நீா் எடுத்து வந்து இரவு சக்தி அழைத்தல் நிகழ்ச்சியும், திங்கள்கிழமை அதிகாலை வி.என்.பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலகம் பின்புறம் உள்ள ஊா் நல்ல கிணற்றிலிருந்து பக்தா்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற தீ மிதித்தல் நிகழ்ச்சிகளும், வெள்ளிக்கிழமை மஞ்சள் நீராடலும், அம்மன் ஊா்வலமும் நடைபெற உள்ளன.