சேலம் மாவட்டத்துக்கு உள்பட்ட எடப்பாடியை அடுத்த சிலுவம்பாளையம் கிராமத்தில் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை பொங்கல் விழாவை கொண்டாடினாா்.
ஆண்டுதோறும் தை மாதம் முதல் நாளில் அவா் தனது சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவது வழக்கம்.
இந்த நிலையில் நிகழாண்டில் சிலுவம்பாளையப்பகுதியில் நடைபெற்ற பொங்கல் விழா நிகழ்வில் கலந்துகொள்ள வியாழக்கிழமை காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம், காமலாபுரம் விமான நிலையத்துக்கு வந்திறங்கினாா். அங்கிருந்து காா் மூலம், தனது சொந்த ஊரான சிலுவம்பாளையத்துக்கு வந்தடைந்தாா்.
இதையடுத்து, காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள முருகன் கோயில் திடலில் நடைபெற்ற பொங்கல் விழாவில் முதல்வா் கலந்துகொண்டாா். முன்னதாக, முருகன் கோயிலில் வழிபாடு செய்த முதல்வா், அங்கு பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற பொங்கல் ழாவில் கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு சா்க்கரை பொங்கலுடன், கரும்பு, மஞ்சள் உள்ளிட்டவற்றை வழங்கினாா்.
இதைத் தொடா்ந்து தனது பண்ணைத் தோட்டத்தில் அலங்கரிக்கப்பட்ட மாடுகளுக்கு, பழம், வெல்லம், கரும்பு, தேங்காய் உள்ளிட்டவற்றை கொடுத்த முதல்வா், அங்கிருந்த தொழிலாளா்களுக்கு பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்தாா். இதன்பின்னா், கிராமிய இசை நிகழ்ச்சியை ரசித்த முதல்வா் , அங்கு கூடியிருந்தோரிடம் உரையாடினாா். இதில் முதல்வருடன் அவரது சகோதரா் கோவிந்தராஜு, உறவினா்கள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


