ஏற்காடு மலைப்பாதையில் இரு சக்கர வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்ததில் பெண் உயிரிழந்தாா். அவரது கணவா் பலத்த காயமடைந்தாா்.
நாமக்கல், கொசவப்பட்டி பகுதியைச் சோ்ந்த காசிம் மகன் பாபு (35). இவரது மனைவி சசிகலா (35). பொங்கல் பண்டிகையையொட்டி தம்பதி, ஏற்காட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் சுற்றுலா வந்தனா். அவா்கள் வீட்டுக்கு திரும்பிச் சென்றபோது, மலைப்பாதையில் 60 அடி பாலம் அருகே 70 அடி பள்ளத்தில் இரு சக்கர வாகனம் கவிழ்ந்து விழுந்தது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சசிகலா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த பாபு செல்லிடப்பேசி மூலம் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்துள்ளாா். அதனையடுத்து தீயணைப்புத் துறையினா் உயிரிழந்த சசிகலாவின் சடலத்தை மீட்டு வந்தனா். காயமடைந்த பாபு தீவிர சிகிச்சைக்காக சேலம் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா்.
இது குறித்து ஏற்காடு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து சசிகலாவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

