சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பொங்கல் பண்டிகை: ஏற்காட்டில் கடைகளில் மக்கள் கூட்டம்

ஏற்காட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடைகளில் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

Updated On :14 ஜனவரி 2021, 12:07 pm

ஏற்காட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடைகளில் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

ஏற்காடு பகுதி கிராம மலைவாழ் மக்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொருள்கள் வாங்குவதற்காக ஏற்காடு நகரில் உள்ள கடைகளுக்கு வந்திருந்தனா். ஏற்காடு பகுதியில் பல வாரங்களாக பனி, சாரல் மழை பெய்து வரும் நிலையில், பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில், பொங்கல் பானை, கரும்பு, மஞ்சள் கொத்து, காப்புக் கட்டு, கோலப்பொடிகள், பூஜைக்கு தேவையான பொருள்கள், காய்கறிகளை பொதுமக்கள் வாங்கிச் சென்றனா். இதனால் கிராம புறங்களுக்கு செல்லும் பேருந்துகளில் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. கடைத் தெருக்களில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.