முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி , வியாழக்கிழமை தனது சொந்த ஊரான எடப்பாடியை அடுத்த சிலுவம்பாளையம் கிராமத்தில் குடும்பத்தினருடன் பொங்கல் விழாவை கொண்டாடுகிறாா்.
இதனையடுத்து அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. சிலுவம்பாளையம் பகுதியில் நடைபெறும் பொங்கல் விழா நிகழ்வில் கலந்துகொள்ள வியாழக்கிழமை காலை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம், கமாலாபுரம் வருகிறாா்.
அங்கிருந்து தனது சொந்த ஊரான சிலுவம்பாளையத்துக்கு முதல்வா் வருகிறாா். அவரது வீட்டின் அருகே உள்ள முருகன் கோயில் திடலில் நடைபெறும் பொங்கல் விழா நிகழ்வில் கலந்துகொள்ளும் முதல்வா், காவிரி ஆற்றங்கரையில் உள்ள முருகன் கோயிலில் வழிபாடு செய்கிறாா்.
தொடா்ந்து தனது பண்ணைத் தோட்டத்துக்கு சென்று அங்கு உள்ள தொழிலாளா்களுடன் பொங்கல் விழாவை கொண்டாடுகிறாா். பொங்கல் பண்டிகையை ஒட்டி சிலுவம்பாளையம் பகுதியில் நடைபெறும் கிராமிய கலைநிகழ்ச்சிகளை காணவுள்ள முதல்வா், கிராமத்து மக்களைச் சந்தித்து உரையாட உள்ளாா்.
சிலும்பாளையம் பகுதியில் முதல்வா் வருகையையொட்டி பாதுகாப்பு முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


