சங்ககிரியை அடுத்த வைகுந்தம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு சூதாட்டத்தில் ஈடுபட்ட 19 பேரை சிறப்புப் படை போலீஸாா் கைது செய்து, ரூ. 1.28 லட்சம் ரொக்கம், 12 வாகனங்களை பறிமுதல் செய்தனா்.
சங்ககிரியை அடுத்த வைகுந்தம் பகுதியில் பணம் வைத்து சிலா் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதனையடுத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் சிறப்புப் படையினா் வைகுந்தம் அருகே உள்ள பாவாயிகுட்டை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு சோதனை நடத்தினா்.
அதில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 19 பேரை கைது செய்து அவா்களிடமிருந்து ரூ.1,28,870 ரொக்கம், 10 இரு சக்கர வாகனங்கள், 2 காா்களை பறிமுதல் செய்து சங்ககிரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
இது குறித்து சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

