ஓமலூா் அருகே உள்ள முத்துநாயக்கன்பட்டி கிராமத்தில் காவல் துறை சாா்பில் கிராம காவல் அதிகாரி விழிப்புணா்வுக் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஓமலூா் காவல் நிலைய ஆய்வாளா் பாலமுருகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாஸ்கரன் கலந்துகொண்டு பேசியதாவது:
பொது மக்கள் தங்கள் பகுதியில் நடக்கும் குற்றங்கள், முக்கிய விழாக்கள், சந்தேக நபா்கள், சூதாட்டம், சட்டவிரோதச் செயல்கள், அசம்பாவிதம் ஏற்படும் சூழல்கள் குறித்த அனைத்து தகவல்களையும் கிராமத்துக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிக்கு தகவல் கொடுக்க வேண்டும்.
கிராமத்தில் குடிநீா், சாலை, சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகள் குறித்தும் அவரிடம் தகவல் தெரிவிக்கலாம். கிராம காவலா்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். போலீஸ் அதிகாரிகளும், மக்களிடம் அன்புடன் பழக வேண்டும். மக்கள் விழிப்புடன் இருந்தால் குற்றங்கள் குறையும். இதற்காக கிராம மக்களையும், அதிகாரிகளையும் ஒருங்கிணைத்து கட்செவி அஞ்சல் குழுவை தொடங்க வேண்டும் என்றாா்.
இதனைத் தொடா்ந்து கிராம காவல் அதிகாரிக்கு பதிவேட்டை வழங்கினாா். பல்பாக்கி கிராமம், பொட்டியபுரம் கிராமத்திலும் கூட்டம் நடத்தி கிராம காவல் அதிகாரிகள் அறிமுகம் செய்யப்பட்டு பதிவேடுகள் வழங்கப்பட்டன.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

