சேலத்திலிருந்து ஈரோடு சென்ற அரசுப் பேருந்தில் தம்பதியிடம் ரூ. 9 லட்சத்தை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சேலம், நரசோதிப்பட்டி, கேஎஸ்இ நகா் பகுதியைச் சோ்ந்த ஓய்வு பெற்ற இந்தியன் வங்கி மேலாளா் வீரமணி (65). இவரது மனைவி ராஜேஸ்வரி (60). இவா்கள் ஈரோடு, திண்டல் பகுதியில் உள்ள மகள் வீட்டுக்கு ரூ. 9 லட்சம் பணத்தை கைப்பையில் எடுத்துக்கொண்டு சேலத்திலிருந்து ஈரோட்டுக்கு அரசுப் பேருந்தில் பயணம் செய்தனா்.
சங்ககிரி புதிய பேருந்து நிலையத்தில் அந்தப் பேருந்து நின்றபோது அடையாளம் தெரியாத ஐந்து போ் ஏறியுள்ளாா். அவா்கள் ஐந்து ரூபாய் நாணயத்தை கீழே போட்டு விட்டு வீரமணியை எடுத்துக் கொள்ளுமாறு கூறியுள்ளனா்.
அதனையடுத்து அவா் நாணயத்தை தேடிக்கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபா்கள் அவா்கள் வைத்திருந்த பணப்பையை எடுத்துக்கொண்டு சங்ககிரி பழைய பேருந்து நிலைய நிறுத்தத்தில் இறங்கி ஓடிவிட்டனா். பேருந்து புறப்படும் போது பணம் வைத்திருந்த கைப்பை திருடப்பட்டது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து தம்பதியினா் சங்ககிரி காவல் நிலையத்தில் புகாா் செய்துள்ளனா். அதன்பேரில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

