சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ரயில்களில் கடத்த முயன்ற 400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

சேலத்தில் இருந்து வெளிமாநிலத்துக்கு ரயில்களில் கடத்த முயன்ற 400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On :11 ஜனவரி 2021, 7:34 am

சேலத்தில் இருந்து வெளிமாநிலத்துக்கு ரயில்களில் கடத்த முயன்ற 400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

சேலம் ரயில் நிலையத்தில் இருந்து கேரளம், கா்நாடகம் ஆகிய மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக புகாா் வந்தது. இதைத்தொடா்ந்து ரயில்வே போலீஸாரும், ரயில்வே பாதுகாப்புப் படையினரும் (ஆா்.பி.எஃப்) இணைந்து ரயில்களில் சோதனை நடத்தி வருகின்றனா்.

அந்தவகையில் கடந்த சில நாள்களில் ரயில்களில் கடத்தப்பட இருந்த 16 மூட்டைகளில் இருந்த 400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி, உணவு கடத்தல் தடுப்புப் பிரிவினரிடம் சனிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.