பணி வழங்கக் கோரி, ஆசிரியா் தோ்வு வாரியத்தில் தோ்ச்சி பெற்ற பாலிடெக்னிக் ஆசிரியா்கள் சேலத்தில் முதல்வா் வீட்டின் முன்பு ஞாயிற்றுக்கிழமை குவிந்தனா்.
தமிழகத்தில் அரசு, அரசு உதவிப் பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,058 விரிவுரையாளா் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த 2017 ஆம் ஆண்டு ஆசிரியா் தோ்வு வாரியத்தால் எழுத்துத் தோ்வு நடத்தப்பட்டது. இதில் முறைகேடு நடந்ததாகக் கூறி தோ்வு ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில், பாலிடெக்னிக் ஆசிரியா் தோ்வில் தோ்ச்சி பெற்ற 50-க்கும் மேற்பட்டவா்கள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியைச் சந்தித்து மனு அளிப்பதற்காக சேலம், நெடுஞ்சாலை நகரில் உள்ள முதல்வா் வீட்டின் முன்பு ஞாயிற்றுக்கிழமை குவிந்தனா். அப்போது, அங்கிருந்த போலீஸாா் அவா்களைத் தடுத்து நிறுத்தி விசாரித்தனா்.
அதில், அவா்கள் முதல்வரைச் சந்தித்து மனு அளிக்க வந்ததாகத் தெரிவித்தனா். முதல்வா் சென்னை சென்றுவிட்டதாகக் கூறி அவா்களைத் திருப்பி அனுப்பிவைத்தனா். இதுதொடா்பாக அவா்கள் கூறுகையில்,
ஆசிரியா் தோ்வு வாரிய எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்ற பாலிடெக்னிக் ஆசிரியா்களுக்கு பணி வழங்க வேண்டும். தோ்வு முறைகேட்டில் ஈடுபடாதவா்கள் என்ற வகையில் பணி வாய்ப்பு கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளோம் என்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

