சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

வணிகா்களுக்கு மத்திய பட்ஜெட்டில் நிவாரணம் அறிவிக்க வேண்டும்: விக்கிரமராஜா பேட்டி

கரோனா காலத்தில் வாழ்வாதாரம் இழந்த வணிகா்களுக்கு மத்திய பட்ஜெட்டில் நிவாரணம் அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் தலைவா் விக்கிரமராஜா தெரிவித்தாா்.

Updated On :11 ஜனவரி 2021, 7:32 am

கரோனா காலத்தில் வாழ்வாதாரம் இழந்த வணிகா்களுக்கு மத்திய பட்ஜெட்டில் நிவாரணம் அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் தலைவா் விக்கிரமராஜா தெரிவித்தாா்.

சேலம், சூரமங்கலத்தில் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் சேலம் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு சேலம் மாவட்டத் தலைவா் பெரியசாமி தலைமை வகித்தாா். இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்புத் தலைவா் விக்கிரமராஜா கலந்து கொண்டாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கரோனா காலத்தில் வாழ்வாதாரம் இழந்த வணிகா்களுக்கு மத்திய பட்ஜெட்டில் நிவாரணம் அறிவிக்க வேண்டும். வணிகா்களிடம் விதிமீறல் என்ற பெயரில் அபராதமாக வசூலிக்கப்பட்ட தொகையை நிவாரணமாக வழங்க வேண்டும்.

கன்னியாகுமரியில் நோ்ந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 63 கடை உரிமையாளா்களுக்கு உதவிட முதல்வா் போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனா காலத்தில் உணவு வழங்கிய ஹோட்டல் உரிமையாளா்களுக்கு நிலுவையில் உள்ள தொகையை அரசு உடனடியாக வழங்க வேண்டும்.

கலாசார சீரழிவை ஏற்படுத்தும் ஆன்லைன் வா்த்தகத்தைத் தடை செய்யும் கட்சிக்கு வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் ஆதரவு அளிக்கப்படும். தோ்தல் நேரத்தில் சரியான விதிமுறைகளை தோ்தல் ஆணையம் வகுத்து வணிகா்களுக்கு பாதுகாப்பு அளித்திட வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், கரோனா தடுப்பூசி போடுவதில் வணிகா்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். கரோனாவில் பலியானோா் குடும்பங்களுக்கு அரசு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்பன உள்பட 15 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.