வாழப்பாடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க பணியாளர்கள் சங்க கூட்டத்தில், தமிழக அரசு பள்ளி சத்துணவு திட்டத்தில் பாலை சேர்க்க வேண்டுமென கோரிக்கை விடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க பணியாளர்கள் பொதுக்குழுக் கூட்டம், வாழப்பாடி அரிமா அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சேலம் மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க பணியாளர்களின் கௌரவ தலைவர் வழக்கறிஞர் ஆர். ராஜேந்திரன் தலைமை வகித்தார். செயலாளர் வேல்முருகன் வரவேற்றார். தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கத்தின் பொதுச்செயலாளர் ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
தமிழ்நாடு பி.எம்.சி மாநில பொதுச் செயலாளர் விஜயகுமார், மாவட்ட பொறுப்பாளர் சேகர், மாவட்ட சங்க செயலாளர், சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில், விவசாயிகளுக்கு பால் பணம் நிலுவையில் இல்லாமல் வழங்கப்பட வேண்டும். பால் பற்றாக்குறை ஏற்படும் காலங்களில், தனியார் பால் பண்ணைகள் மூலமாக பால் கொள்முதல் செய்ய சங்கப் பணியாளர்கள் வற்புறுத்தக் கூடாது. அதிகமாக பால் உற்பத்தியாகும் காலங்களில் உற்பத்தியாளர்களிடம் பால் வாங்க மறுக்கக்கூடாது. அரசுப் பள்ளி சத்துணவு திட்டத்தில் பாலை சேர்க்க தமிழக அரசு எடுக்க வேண்டும்.
மற்ற மாநிலங்களைப் போல பாலில் கொழுப்புச்சத்து மட்டுமின்றி இதர சத்துக்களையும் அறிய ஐ.எஸ்.ஐ தரத்தில் அளவிட வேண்டும். கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கப் பணியாளர்களை பணி வரன்முறை படுத்திட வேண்டும். கரானா காலத்தில் ஓய்வில்லாமல் பணியாற்றிய பணியாளர்களுக்கு, பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வட்டார பொறுப்பாளர் தனபால் நன்றி கூறினார்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


