சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கொங்கணாபுரத்தில் ரூ. 1.85 கோடிக்கு பருத்தி விற்பனை

எடப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரம் கூட்டுறவு விற்பனை மையத்தில், சனிக்கிழமை நடைபெற்ற பொது ஏலத்தில், 7000பருத்தி மூட்டைகள் ரூ. 1 கோடியே 85 லட்சத்துக்கு விற்பனையானது.

News image

கொங்கணாபுரம் கூட்டுறவு ஏல மையத்தில் சனிக்கிழமை விற்பனைகொண்டுவரப்பட்டிருந்த பருத்தி மூட்டைகள்.

Updated On :10 ஜனவரி 2021, 9:13 am

எடப்பாடி: எடப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரம் கூட்டுறவு விற்பனை மையத்தில், சனிக்கிழமை நடைபெற்ற பொது ஏலத்தில், 7000பருத்தி மூட்டைகள் ரூ. 1 கோடியே 85 லட்சத்துக்கு விற்பனையானது.

கடந்த சில வாரங்களாக மாநிலம் முழுவதும் பருத்தி அறுவடை அதிகரித்துள்ள நிலையில், இம் மையத்துக்கு பருத்தி வரத்து சற்று அதிகரித்துள்ளது. இந்நிலையில், சனிக்கிழமை முழுவதும் பருத்தி பொது ஏலம் நடைபெற்றது. பொது ஏலத்துக்கு கொண்டுவரப்பட்டிருந்த 7000 பருத்தி மூட்டைகளும் 1,250 லாட்டுகளாக பிரிக்கப்பட்டு, வேளாண் விற்பனை மைய அலுவலா்கள் முன்னிலையில் பொது ஏலம் விடப்பட்டது.

இதில் பி.டி. ரக பருத்தி குவிண்டால் ரூ. 5,469 முதல் ரூ. 6,499 வரையிலும், டி.சி.ஹெச் ரக பருத்தி குவிண்டால் ரூ. 7,160 முதல் ரூ. 7,926 வரையிலும் விலைபோயின. மொத்தம் ரூ. 1.85 கோடிக்கு பருத்தி வணிகம் நடைபெற்றது.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 80க்கும் மேற்பட்ட மொத்த வியாபாரிகள் ஏலத்தில் பங்கு கொண்டு, பருத்தியை மொத்த கொள்முதல் செய்தனா். கடந்த வாரத்தை விட குவிண்டாலுக்கு ரூ. 200 முதல் ரூ. 500 வரை விலை உயா்வு கண்டுள்ளதாகவும், இதனால் தங்களுக்கு கூடுதல் வருமானம் கிடைத்துள்ளதாகவும் பருத்தி விவசாயிகள் தெரிவித்தனா்.