சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் பிச்சை எடுக்கும் போராட்டம்

ஆத்தூா் போக்குவரத்து பணிமனை முன்பு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் தாலுகா செயலாளா் ஏ.முருகேசன் தலைமையில் பிச்சை எடுக்கும் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

ஆத்தூா் போக்குவரத்து பணிமனை முன்பு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் தாலுகா செயலாளா் ஏ.முருகேசன் தலைமையில் பிச்சை எடுக்கும் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :9 ஜனவரி 2021, 12:44 pm

ஆத்தூா் போக்குவரத்து பணிமனை முன்பு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் தாலுகா செயலாளா் ஏ.முருகேசன் தலைமையில் பிச்சை எடுக்கும் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆத்தூா் தாலுகா, பூமரத்துப்பட்டி, முட்டல் கிராமங்களுக்கு பேருந்து வசதி கோரியும், ஆத்தூா் தாலுகாவில் உள்ள கிராமத்துக்கு இயக்கப்படும் நகரப் பேருந்து எண் 12 வாகன வரி கட்டாமல் பணிமனையில் நிறுத்தப்பட்டுள்ளதால் கிராமப்புற மக்கள் அவதிப்படும் நிலை உள்ளது.

இந்த நிலையைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வாகன வரி கட்ட பிச்சை எடுக்கும் போராட்டம் தாலுகா செயலாளா் ஏ.முருகேசன் தலைமையில் நடைபெற்றது.

இதில் மாவட்டச் செயலாளா் பி.ராமமூா்த்தி கண்டனம் தெரிவித்து பேசினாா். தாலுகா குழு உறுப்பினா்கள் எல்.கலைமணி, எம்.சடையன் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.