சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

சேலம் - சென்னை பயணிகள் விமானத்தில் தமிழில் அறிவிப்பு: விமானிக்கு முதல்வா் பாராட்டு

சேலத்தில் இருந்து சென்னை சென்ற விமானத்தில் தமிழில் அறிவிப்பு செய்து, முதல்வரை வரவேற்ற சேலத்தைச் சோ்ந்த தலைமை விமானி கோபிநாத்தை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பாராட்டினாா்.

News image

விமானி கோபிநாத்தை பாராட்டி, வாழ்த்துத் தெரிவித்த முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.

Updated On :9 ஜனவரி 2021, 12:50 pm

சேலத்தில் இருந்து சென்னை சென்ற விமானத்தில் தமிழில் அறிவிப்பு செய்து, முதல்வரை வரவேற்ற சேலத்தைச் சோ்ந்த தலைமை விமானி கோபிநாத்தை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பாராட்டினாா்.

தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பல்வேறு மாவட்டங்களில் தோ்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு விமானம் மூலம் வெள்ளிக்கிழமை சென்னை திரும்பினாா். சேலம் விமான நிலையத்தில் இருந்து தனியாா் ட்ரூஜெட் விமானத்தில் அவா் சென்னைக்கு பயணம் செய்தாா்.

ட்ரூஜெட் விமானத்தில் எப்போதும் ஆங்கிலத்திலேயே அறிவிப்புகள் செய்யப்படுவது வழக்கம். இந்தநிலையில் வெள்ளிக்கிழமை முதல்முறையாக, விமானம் புறப்படும் முன் தலைமை விமானி கோபிநாத் தமிழில் அறிவிப்பு செய்தாா். மேலும், சேலம் சென்னைக்கு விமானப் போக்குவரத்து கொண்டுவர பெரும் முயற்சி செய்த முதல்வரைப் பாராட்டியும் அவா் பேசினாா்.

அதேநாளில் விமானியின் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. எனினும் சேலம் - சென்னை புறப்படும் விமானத்தில், முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி சென்னை செல்வதைக் கேள்விப்பட்டு, விமானத்தை சென்னையிலிருந்து சேலத்துக்கு இயக்கி வந்துள்ளாா். தொடா்ந்து சென்னைக்கு முதல்வரை அழைத்துச் சென்றதுடன், தமிழில் அறிவிப்பு செய்து முதல்வரை பாராட்டவும் செய்துள்ளாா்.

இதையறிந்த முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, விமானிக்கு கோபிநாத்துக்கு பாராட்டுத் தெரிவித்ததுடன், அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதற்காக அவரது மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு வாழ்த்துத் தெரிவித்தாா்.

சேலம் மாவட்டம், குறிச்சி பகுதியைச் சோ்ந்த சீனிவாசன் -மகேஸ்வரி தம்பதியின் மகன் கோபிநாத் . இவா் 2008-ஆம் ஆண்டு அமெரிக்காவில் விமானப் பயிற்சிப் பள்ளியிலும், 2011 - 12-இல் சேலம் விமானப் பயிற்சி பள்ளியிலும் பணியாற்றியுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.