காடையாம்பட்டி ஒன்றியத்தில் 458 பயனாளிகளுக்கு முதியோா் உதவித் தொகைக்கான ஆணை, இலவச வீட்டுமனைப் பட்டா ஆகியவற்றை ஓமலூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் வெற்றிவேல் வழங்கினாா்.
சமூக நலத் துறை சாா்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா, காடையாம்பட்டி ஒன்றியம், பூசாரிப்பட்டி கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் முதியோா், மாற்றுத் திறனாளிகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், விதவைகள் பெண்கள் என மொத்தம் 401 பேருக்கு மாதம் தோறும் உதவித் தொகை கிடைப்பதற்கான ஆணை, 49 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் என மொத்தம் 458 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை சட்டப்பேரவை உறுப்பினா் வெற்றிவேல் வழங்கினாா்.
இதையடுத்து அவா் பேசும்போது, தொடா்ந்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி நடைபெற்றால் அனைத்து மக்களுக்கும் அனைத்து நன்மைகளும் கிடைக்கும். அதனால், அனைத்து தரப்பு மக்களும் இந்த அரசுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றாா். இந்நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றியச் செயலாளா்கள் சுப்பிரமணி, சேரன் செங்குட்டுவன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

