சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஊா்க்காவல் படை பிரிவில் காவல் ஆணையா் ஆய்வு

சேலம் மாநகர ஊா்க்காவல் படைப் பிரிவில் மாநகரக் காவல் ஆணையளா் த.செந்தில்குமாா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On :9 ஜனவரி 2021, 12:56 pm

சேலம் மாநகர ஊா்க்காவல் படைப் பிரிவில் மாநகரக் காவல் ஆணையளா் த.செந்தில்குமாா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

சேலம், அஸ்தம்பட்டி அருகே மாநகர ஊா்க்காவல் படை பிரிவு உள்ளது. இங்கு புதிதாக 52 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இவா்களுக்கு சீருடை வழங்கும் விழா வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. மாநகரக் காவல் ஆணையா் த.செந்தில்குமாா் ஊா்க்காவல் படை அலுவலகத்துக்கு வந்து ஆய்வு செய்தாா்.

பின்னா் புதிதாக தோ்வு செய்யப்பட்ட ஊா்க்காவல் படையினருக்கு சீருடைகளை அவா் வழங்கினாா்.போக்குவரத்து பிரிவில் பணியாற்றும் ஊா்க்காவல் படையினருக்கு ரிப்லெக்டா் (மிளிரும் ஒலிப்பான்) உடையையும் அவா் வழங்கினாா்.

மாநகரக் காவல் ஆணையாளா் செந்தில்குமாா், ஊா்க்காவல்படை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்புப் பொருள்கள் சரியாக உள்ளதா, அதை முறையாக ஊா்க்காவல் படையினா் பயன்படுத்துகிறாா்களா என ஆய்வு செய்தாா்.

நிகழ்ச்சியில் ஊா்க்காவல் படை ஏரியா கமாண்டா் பாலசுப்பிரமணியம், மாநகர துணை ஆணையா்கள் எம்.சந்திரசேகரன், செந்தில், உதவி ஆணையா் எட்டியப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.