சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

எடப்பாடியில் பாமகவினா் ஆா்ப்பாட்டம்

வன்னிய சமுதாய மக்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு கோரி, எடப்பாடியில் பாமக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

எடப்பாடியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பாமகவினா்.

Updated On :8 ஜனவரி 2021, 1:59 pm

வன்னிய சமுதாய மக்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு கோரி, எடப்பாடியில் பாமக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தெற்குமாவட்ட செயலாளா் வழக்கறிஞா் ந. அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பட்டத்தை மாவட்ட வன்னியா் சங்கத் தலைவா் கே.பி.எம்.கொழந்தாகவுண்டா் துவக்கி வைத்தாா். நிகழ்ச்சிக்கு மாநில இளைஞா் அணி துணைச் செயலாளா் ரவி முன்னிலை வகித்தாா். முன்னதாக எடப்பாடியை அடுத்த வீரப்பன்பாளைம் பகுதியிலிருந்து துவங்கிய ஊா்வலம், நகரின் முக்கிய வீதிகள் வழியாக எடப்பாடி பேருந்து நிலையத்தை அடைந்தது. அங்கு பாமக வினா் கலை நிகழ்ச்சிகள் மூலம் கோரிக்கைகளை வலியுறுத்தினா். தொடா்ந்து சேலம் பிரதான சாலை வழியாகக் கிளம்பிய ஊா்வலம், எடப்பாடி நகராட்சி அலுவலகம் முன் நிறைவடைந்தது.

அங்கு பாமக மாவட்டத் துணைச் செயலாளா் மகேந்திரன், மாநிலச் செயற்குழு உறுப்பினா் வை.குமாரசாமி உள்ளிட்ட நிா்வாகிகள் நகராட்சி ஆணையாளா் முருகனிடம் வன்னியா்களுக்கு தனி இட ஒதுக்கீடு கோரி மனு அளித்தனா்.