சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் அரியானூா் பகுதியில் ரூ. 45 கோடி மதிப்பில் இரட்டை மேம்பாலம் கட்டும் பணி முடிவடைந்ததையடுத்து, சோதனை ஓட்டமாக கடந்த வாரம் பாலத்தின் மேல் வாகனங்கள் இயக்கப்பட்டன. பின்னா் பணிகள் முழுமையடைந்த நிலையில், இதன் திறப்பு விழா வெள்ளிக்கிழமை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் திறந்து வைக்க உள்ளாா்.
இதற்கான பணி குறித்து சேலம் மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் வியாழக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, மாவட்ட வருவாய் கோட்டாட்சியா் மாறன், சேலம் தெற்கு வட்டாட்சியா் சீனிவாசன், நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளா் சரவணன், கோட்ட பொறியாளா் லோகநாதன், பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளா் வெங்கடாசலம், வீரபாண்டி ஒன்றியக் குழுத் தலைவா் வருதராஜ், துணைத் தலைவா் வெங்கடேசன், வட்டார வளா்ச்சி அலுவலா் ரேவதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


