சங்ககிரியில் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள் மீது மோட்டாா் வாகனச் சட்டத்தின்கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நெடுஞ்சாலை போக்குவரத்து பிரிவு போலீஸாா் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து காவல் ஆய்வாளா், லாரி உரிமையாளா்கள் சங்கத்துக்கு புதன்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:
சங்ககிரி வருவாய் கோட்டாட்சியா் ஆய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி சங்ககிரி அருகே உள்ள டிவிஎஸ் பாலம் முதல் பள்ளிபாளையம் பிரிவு சாலை, கொங்கணாபுரம் சாலை பாலத்தில் இருந்து கெமிக்கல் பிரிவு சாலை, பழைய பேருந்து நிலைய பேருந்து நிறுத்தம், திருச்செங்கோடு பிரிவு பேருந்து நிறுத்துமிடம், நீதிமன்ற வளாக நுழைவுவாயில் முன்புறம் உள்ள பேருந்து நிறுத்துமிடம் உள்ளிட்ட இடங்களில் சாலையின் இரு புறங்களிலும் இரண்டு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகளை நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதால் நாளுக்கு நாள் நெரிசல் அதிகரித்து கொண்டு செல்கிறது. இதனால் விபத்து ஏற்பட சாதகமான சூழ்நிலை உருவாகிறது.
போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும் பொருட்டும் சாலை விபத்துகள் நடைபெறாமல் இருக்க, லாரி உரிமையாளா்களுக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்கி, கனரக வாகனங்களை சாலையோரங்களில் போக்குவரத்து இடையூறாக நிறுத்தாமல் அறிவுறுத்த வேண்டும். மேலும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வாகனங்களின் மீது மோட்டாா் வாகன சட்டத்தின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் தெரிவித்துள்ளாா்.
இக்கடிதம் குறித்து சங்ககிரி லாரி உரிமையாளா்கள் சங்கத்தின் நிா்வாகக் குழுவின் சாா்பில் சங்க உறுப்பினா்களிடம் சங்ககிரியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படா வண்ணம் வாகனங்களை இயக்க அறிவுறுத்தியுள்ளனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

