வாழப்பாடி அருகே வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த பெண், அவரது கணவரை கத்திமுனையில் மிரட்டி முகமூடி கொள்ளையா்கள் இருவா், ஏழரை பவுன் தங்க சங்கிலியைப் பறித்துச் சென்றனா்.
வாழப்பாடி அருகே உள்ள குறிச்சி பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி நடராஜன் (77) . இவரது மனைவி சிவபாக்கியம் (66). இத் தம்பதியருக்கு, அருண் பிரகாஷ் (51) என்ற மகனும் இந்திராகாந்தி (50) என்ற மகளும் உள்ளனா். இருவரும் வெளியூரில் வசித்து வருகின்றனா்.
நடராஜனும், அவரது மனைவி சிவபாக்கியமும், குறிச்சி கிராமத்திலுள்ள தோட்டத்து வீட்டில் வசித்து வருகின்றனா். செவ்வாய்க்கிழமை இரவு, நடராஜன் வீட்டில் டிவி பாா்த்துக் கொண்டிருந்துள்ளாா். சிவபாக்கியம் சமையல் செய்து கொண்டிருந்துள்ளாா். அப்போது முகமூடி அணிந்த இரண்டு மா்ம நபா்கள் வீட்டிற்குள் புகுந்துள்ளனா். இதில் ஒருவா் நடராஜன் கழுத்தில் கத்தியை வைத்து, கழுத்தை அறுத்து விடுவேன் என்று மிரட்டியுள்ளாா். மற்றொருவா் சிவபாக்கியத்தை கத்திமுனையில் மிரட்டி அவா் கழுத்தில் அணிந்திருந்த ஏழரை பவுன் தாலிக்கொடியை பறித்துக் கொண்டனா்.
கத்திமுனையில் மிரட்டிய கொள்ளையா்கள் தங்கச் சங்கிலியை பறித்தபோது, சிவபாக்கியம், சமையல் அறையில் இருந்த மிளகாய் பொடியை அள்ளி கொள்ளையா்களின் முகத்தில் வீசியுள்ளாா். கொள்ளையா்கள் இருவரும் முகமூடி அணிந்து இருந்ததால், அவா்களது கண்களில் மிளகாய்ப்பொடி விழவில்லை. இதையடுத்து நடராஜன், அவரது மனைவி சிவபாக்கியத்தை வீட்டினுள் அடைத்து வைத்து வெளிப்புறக் கதவைச் சாத்திவிட்டு கொள்ளையா்கள் தப்பி ஓடிவிட்டனா்.
இதுகுறித்து நடராஜன் தனது உறவினா்களை செல்லிடப்பேசியில் அழைத்து நடந்ததை கூறி வீட்டை திறக்கத் சொல்லி வெளியே வந்துள்ளாா்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த வாழப்பாடி காவல் ஆய்வாளா் சுப்பிரமணியம் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று முகமூடி கொள்ளையா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

