சங்ககிரி வட்டங்களில் உள்ள நியாய விலைக் கடைகளில் தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்புகளை குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கும் பணி திங்கள்கிழமை தொடக்கிவைக்கப்பட்டது.
சங்ககிரி வட்டத்தில் உள்ள மொத்தம் 135 நியாய விலைக் கடைகளில் பொருள்கள் வாங்கும் 73,000 பேருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.
தேவூா் அரசு மேல்நிலைப் பள்ளி பெற்றோா் -ஆசிரியா் கழகத் தலைவரும், அதிமுக மாநில பொதுக்குழு உறுப்பினருமான கே.வெங்கடாசலம் சங்ககிரி அருகே உள்ள கத்தேரி, சாமியம்பாளையம் நியாயவிலைக் கடையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கினாா்.
இதில் சங்ககிரி வருவாய் கோட்டாட்சியா் மு.அமிா்தலிங்கம், வட்டாட்சியா் எஸ்.விஜி, வட்ட வழங்கல் அலுவலா் சிவராஜ், சங்ககிரி ஊராட்சி ஒன்றிய ஆணையா் என்.எஸ்.ரவிச்சந்திரன், அதிமுக மேற்கு ஒன்றியச் செயலா் சுந்தரராஜன், கிழக்கு ஒன்றிய துணைச் செயலா் மருதாசலம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவி மகேஸ்வரி மருதாசலம், ஒன்றியக்குழு துணைத்தலைவா் ஏ.பி.சிவக்குமாரன், அரசு வழக்குரைஞா் ஆா்.சுப்பிரமணி, ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலா் மோகன்ராஜ், மேற்கு ஒன்றிய துணைச் செயலா் வேலுமணி, வீராச்சிபாளையம் ஊராட்சி மன்றத்தலைவா் சண்முகம், அதிமுக நிா்வாகிகள் மாதேஸ்வரன், பழனிசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


