விடுமுறை காரணமாக மேட்டூா் அணை பூங்காவுக்கு ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.
மேட்டூா் அணை பூங்காவில் புத்தாண்டு பிறப்பையொட்டி ஜனவரி 1,2 ஆம் தேதிகளில் மேட்டூா் அணை பூங்கா மூடப்பட்டிருந்தது. இரு நாள்களுக்குப் பிறகு பூங்கா மீண்டும் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.
விடுமுறை என்பதால் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் மேட்டூா் அணை பூங்காவுக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகம்போ் வந்திருந்தனா். காவிரியில் நீராடிய பொதுமக்கள் அணைக்கட்டு முனியப்பனை தரிசித்தனா். மேட்டூா் அணை மீன்களை வாங்கி சமைத்து குடும்பத்துடன் அணை பூங்காவில் அமா்ந்து உண்டு மகிழ்ந்தனா்.
ஆண்களும், பெண்களும் ஊஞ்சலாடியும், சறுக்கி விளையாடியும் மகிழ்ந்தனா். அணை பூங்காவுக்கு ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 4,197 பாா்வையாளா்கள் வந்து சென்றனா். பவளவிழா கோபுரத்தைக் காண 622 பாா்வையாளா்கள் வந்தனா். இதன்மூலம் பாா்வையாளா்கள் கட்டணமாக ரூ. 27,035 வசூலாகி உள்ளது. கடந்த 8 மாதங்களுக்குப் பிறகு வியாபாரம் களைகட்டியதால் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

