சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் தமிழகரசின் சார்பில் பொங்கல் பண்டிகைக்காக வழங்கப்படும் ரொக்கம் ரூ.2,500 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்புகளை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் பணிகள் திங்கள்கிழமை தொடக்கி வைக்கப்பட்டன.
பொங்கல் பண்டிகையையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரொக்கம் ரூ.2,500 உடன் கூடிய பொங்கல் பரிசுத்தொகுப்பான ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு நீள கரும்பு, 5 கிராம் ஏலக்காய், தலா 20 கிராம் முந்திரி, திராட்சை ஆகியவைகள் வழங்க தமிழகரசு அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து சங்ககிரி வட்டத்தில் உள்ள 48 முழு நேரமும், 87 பகுதி நேர கடைகள் உள்பட மொத்தம் 135 ரேஷன் கடைகளில் பொருள்கள் வாங்கும் 73,000 பேருக்கு அவைகளை வழங்கும் பணிகளை தேவூர் அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக்தலைவரும், அதிமுக மாநில பொதுக்குழு உறுப்பினருமான கே.வெங்கடாஜலம் சங்ககிரி அருகே உள்ள கத்தேரி, சாமியம்பாளையம் ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கி தொடக்கி வைத்தார்.
சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் மு.அமிர்தலிங்கம், வட்டாட்சியர் எஸ்.விஜி, வட்ட வழங்கல் அலுவலர் சிவராஜ், அதிமுக மேற்கு ஒன்றியச் செயலர் சுந்தரராஜன், கிழக்கு ஒன்றிய துணைச் செயலர் மருதாசலம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் ஏ.பி.சிவக்குமாரன், அரசு வழக்குரைஞர் ஆர்.சுப்ரமணி, ஒன்றிய ஜெயலிலதா பேரவை செயலர் மோகன்ராஜ், மேற்கு ஒன்றிய துணைச் செயலர் வேலுமணி, வீராச்சிப்பாளையம் ஊராட்சி மன்றத்தலைவர் சண்முகம்,அதிமுக நிர்வாகிகள் மாதேஸ்வரன், பழனிசாமி உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


