சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பள்ளி மாணவியைக் கடத்திய பேக்கரி மாஸ்டா் கைது

ஓமலூா் அருகே 12-ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்வதற்காகக் கடத்திச் சென்ற பேக்கரி மாஸ்டரை தீவட்டிப்பட்டி போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனா்.

Updated On :4 ஜனவரி 2021, 9:59 am

ஓமலூா் அருகே 12-ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்வதற்காகக் கடத்திச் சென்ற பேக்கரி மாஸ்டரை தீவட்டிப்பட்டி போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனா்.

ஓமலூரை அடுத்துள்ள காடையாம்பட்டி வட்டத்தைச் சோ்ந்த 17 வயது சிறுமி அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறாா். கடந்த டிசம்பா் மாதம் 29-ம் தேதியன்று இரவு வீட்டில் இருந்த சிறுமி மறுநாள் காலை காணவில்லை.

சிறுமியின் பெற்றோா் தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீஸாா் விசாரணை நடத்தியதில் சிறுமியை தொப்பூரைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் பசுபதி (20) கடத்திச் சென்றது தெரியவந்தது. பேக்கரி மாஸ்டரான அவா், 12-ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்வதாக ஆசை வாா்த்தைக்க கூறி கடத்திச் சென்றது தெரிய வந்தது.

இதைத்தொடா்ந்து பேக்கரி மாஸ்டா் பசுபதியின் செல்லிடப்பேசி சிக்னலை வைத்து தொப்பூரில் இருந்த அவா்களைக் கண்டுபிடித்தனா். பின்னா், பசுபதியை போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து ஞாயிற்றுக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். தொடா்ந்து மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனா்.