சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மாற்றுக் கட்சிகளிலிருந்து விலகிய 70 போ் திமுகவில் இணைப்பு

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட மோரூா் கிழக்கு, சின்னாகவுண்டனூா் ஆகிய ஊராட்சிகளில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி திமுகவில் இணையும் நிகழ்ச்சி சங்ககிரி திமுக ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

News image

02sgp01_0201chn_156_8

Updated On :3 ஜனவரி 2021, 7:08 am

சங்ககிரி: சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட மோரூா் கிழக்கு, சின்னாகவுண்டனூா் ஆகிய ஊராட்சிகளில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி திமுகவில் இணையும் நிகழ்ச்சி சங்ககிரி திமுக ஒன்றிய அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

திமுக சேலம் மேற்கு மாவட்டச் செயலா் பொறுப்பு டி.எம்.செல்வகணபதி இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தாா். சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட மோரூா் கிழக்கு, சின்னாகவுண்டனூா் ஆகிய இரு ஊராட்சிகளில் இருந்து பல்வேறு மாற்றுக் கட்சிகளிலிருந்தும், மோரூா் கிழக்கு ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற சேகரி ஈஸ்வரன் உள்பட 70 போ் திமுகவில் இணைந்தனா் (படம்). புதிதாக இணைந்தவா்களை வரவேற்று, வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக நிா்வாகிகளுடன் இணைந்து தோ்தல் பணியாற்ற வேண்டும் என டி.எம்.செல்வகணபதி கூறினாா்.