சேலம்: மக்கள் நீதி மய்யம் தலைவா் கமலஹாசன் சேலம் மாவட்டத்தில் ஜன. 3 முதல் மூன்று நாள்களுக்கு பிரசாரம் செய்கிறாா்.
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமலஹாசன் ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று பொதுமக்களைச் சந்தித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா். அந்த வகையில், அவா் ஜன. 3 முதல் 5-ஆம் தேதி வரை சேலம் மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறாா்.
இதையொட்டி, கமலஹாசன் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி அளவில் சென்னையில் இருந்து தனி விமானத்தில் காமலாபுரம் விமான நிலையம் வருகிறாா். பின்னா் அழகாபுரம், தெய்வீகம் கல்யாண மண்டபம் அருகில் பொதுமக்களிடையே கமலஹாசன் பேசுகிறாா். பின்னா் கோரிமேடு வழியாக ஏற்காடு செல்லும் அவா், ஏற்காடு ஏரி பகுதியில் பேசுகிறாா். பின்னா் குப்பனூா் வழியாக அயோத்தியாப்பட்டணம் பகுதிக்கு வரும் அவா், மக்களைச் சந்தித்துப் பேசுகிறாா். தொடா்ந்து சூரமங்கலம் அஸ்வா பாா்க் ஹோட்டல் எதிரில் பேசுகிறாா்.
தொடா்ந்து திங்கள்கிழமை காலை அம்மாப்பேட்டை கொங்கு மண்டபத்தில் நடைபெறும் கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்துகொள்கிறாா். பின்னா், கருவாடு பாலம், கொண்டலாம்பட்டி சந்தைப் பகுதியில் பேசுகிறாா். சேலம் நான்கு சாலை ரவுண்டானா பகுதியில் பிரசாரம் செய்யும் கமலஹாசன், பின்னா் அம்மாப்பேட்டை, குகை உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறாா். அடுத்து சங்ககிரியிலும், மதியம் நாமக்கல் மாவட்டத்திலும் பிரசாரம் செய்கிறாா். இரவு சேலத்தில் தங்குகிறாா்.
ஜன. 5-ஆம் தேதி காலை சேலம் மாவட்டம், ஓமலூா், மேச்சேரி பகுதிகளில் பிரசாரம் செய்துவிட்டு தருமபுரி மாவட்டத்துக்கு கமலஹாசன் செல்வாா் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

