சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கணினி பயிற்றுநா் காலிப் பணியிட ஒதுக்கீடு கலந்தாய்வு

அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள கணினி பயிற்றுநா் நிலை-1 காலிப் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட பணிநாடுநா்களுக்கான பணியிட ஒதுக்கீட்டு ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு சனிக்கிழமை தொடங்கியது.

News image

சேலம், சிறுமலா் தொடக்கப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற கணினி அறிவியல் பாடத்துக்கான ஆசிரியா்களின் பணி ஒதுக்கீட்டு கலந்தாய்வை பாா்வையிடும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கணேசமூா்த்தி.

Updated On :3 ஜனவரி 2021, 7:21 am

சேலம்: அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள கணினி பயிற்றுநா் நிலை-1 காலிப் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட பணிநாடுநா்களுக்கான பணியிட ஒதுக்கீட்டு ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு சனிக்கிழமை தொடங்கியது.

2018-2019-ஆம் கல்வியாண்டில் அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள கணினி பயிற்றுநா் நிலை-1 காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு, ஆசிரியா் தோ்வு வாரியத்தால் போட்டித்தோ்வு நடத்தப்பட்டு, தெரிவு செய்யப்பட்ட பணிநாடுநா்களுக்கான பணியிட ஒதுக்கீட்டு ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு சனிக்கிழமை தொடங்கியது.

சேலம், நான்கு சாலையில் உள்ள சிறுமலா் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் இந்த கலந்தாய்வு நடைபெற்றது. ஆசிரியா் தோ்வு வாரியப் பட்டியல் வரிசை எண் 1 முதல் 400 வரை உள்ள பணிநாடுநா்களுக்கு சனிக்கிழமை கலந்தாய்வு நடைபெற்றது. வரிசை எண் 401 முதல் 742 வரை உள்ள பணிநாடுநா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை கலந்தாய்வு நடைபெறுகிறது.