சேலம் அன்னதானப்பட்டியில் முன்விரோதம் காரணமாக, 7 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் மேலும் இருவரை காவல் துறையினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
சேலத்தை அடுத்த கருப்பூர் வட்டக்காடு பகுதியைச் சேர்ந்தவர் எம்.பாபு (38). கொலை, நகைப் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்.
இவருக்கும், தாதகாப்பட்டி பகுதியைச் சேர்ந்த மற்றொரு கும்பலுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில், அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் கையெழுத்திடுவதற்காக சென்ற பாபு, இவரது தந்தை மாது உள்ளிட்ட 6 பேர், அதே பகுதியைச் சேர்ந்த ராஜா ஆகியோரை ஒரு கும்பல் கடந்த 8-ஆம் தேதி அரிவாளால் வெட்டியது.
இதில், பலத்த காயம் அடைந்த அனைவரும் சேலம் அரசு அதிநவீன மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் அன்னதானப்பட்டி காவல் துறையினர், வளத்தி குமார் உள்ளிட்ட 4 பேரைக் கைது செய்தனர்.
மேலும் சிலர் தருமபுரி நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்தனர். இந்த நிலையில், தலைமறைவாக இருந்த சேலம் சண்முக நகரைச் சேர்ந்த கே.மோகன் (32), தருமபுரி, செட்டிக்கரையைச் சேர்ந்த என்.சிவா (31) ஆகிய இருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

