சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஆன்மிகம்

இந்த வாரம் எப்படி இருக்கும்? என்ன சொல்கிறார் ஜோதிடர்!

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (டிச.15 - டிச.21) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார்.

இந்த வாரம் எப்படி இருக்கும்? என்ன சொல்கிறார் ஜோதிடர்!
Updated On :15 டிசம்பர் 2023, 2:57 pm
Q

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

A

தொழிலில் உண்டாகும் பிரச்னைகளை புத்திசாலித்தனமாகச் சமாளிப்பீர்கள். தாய்வழி உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும்.  பொருளாதார நிலை சீராகவே இருக்கும்.

Q

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

A

அரசு வழியில் ஆதாயம் கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். குழந்தைப் பேறு கிடைக்கும்.

Q

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

A

தொழிலில் புதிய மாற்றங்களைச் செய்வீர்கள். புதிய நட்புகள் உருவாகும். மதிப்பும் மரியாதையும் உயரும்.

Q

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

A

குடும்பத்தில் அமைதி நிறையும். தோற்றத்தில் பொலிவும், நடையில் மிடுக்கும் உண்டாகும்.