தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரம் ஸ்ரீநாகநாதசுவாமி கோவிலில் உள்ள ஸ்ரீராகுபகவான் உற்சவ மூர்த்திக்கு ரூ. 3 லட்சத்தில் தங்கமுலாம் பூசிய கவசத்தை முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.
நவக்கிரகங்களில் ராகுதலமாகத் திகழும் இந்தக் கோவிலில் ராகுபகவான் நாக கன்னி, நாகவள்ளி இரு கன்னிகையுடன் தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகிறார். மூலவர் நாகநாதபெருமானின் பிரகாரத்தில் ராகுபகவான் உத்சவர் சன்னதி உள்ளது.
இந்தக் கோவிலுக்கு இந்திய கிரிக்கெட் வாரிய தேர்வுக் குழு உறுப்பினரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான ஸ்ரீகாந்த், ராகுபகவான் உற்சவருக்கு சாத்தக்கூடிய வகையில், ரூ.3 லட்சத்தில் திருவாச்சி, பீடத்துடன் கூடிய தங்கமுலாம் பூசப்பட்ட கவசத்தை வழங்கினார்.
இதையொட்டி, கோவிலில் சிறப்பு ஹோமமும், அதைத்தொடர்ந்து, ராகுபகவானுக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றன.
பிறகு, ராகுபகவான் உற்சவருக்கு தங்கமுலாம் பூசப்பட்ட கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


