சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஸ்ரீஆண்டாள் திருஆடிப்பூர பெருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் திருஆடிப்பூர பெருவிழா வியாழக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Updated On :2 ஆகஸ்ட் 2013, 6:51 am

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் திருஆடிப்பூர பெருவிழா வியாழக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பூமிப்பிராட்டியாம் ஸ்ரீஆண்டாளின் திருஅவதார தினமான ஆடிப்பூர நன்னாளைக் கொண்டாடும் விதமாக ஸ்ரீஆண்டாள் திருஆடிப்பூர பெருவிழா ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விஜயபாஸ்கர பட்டர் கொடியேற்றிவைத்தார். முன்னதாக, ஸ்ரீஆண்டாள், ரெங்கமன்னாருக்கு விசேஷ பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் கோயில் தக்கார் தொழிலதிபர் கி.ரவிச்சந்திரன், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர்மன்றத் தலைவி வி.செந்தில்குமாரி உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

12 நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவில் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வாகனங்களில் ஸ்ரீஆண்டாள், ரெங்கமன்னார் புறப்பாடு நடைபெற்று பல்வேறு மண்டபங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.

முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஆகஸ்ட் 9 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 8.05 மணிக்கு நடைபெறுகிறது. அன்றைய தினம் வெளிநாடுகளில் இருந்தும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வரும் பக்தர்களுக்கு பல்வேறு வசதிகளை மாவட்ட நிர்வாகம் விரிவாகச் செய்துள்ளது. ஆகஸ்ட் 5 ஆம் தேதி இரவு ஐந்து கருட சேவை நடைபெறும். ஸ்ரீஆண்டாள் பெரிய அன்ன வாகனம், ஸ்ரீரெங்கமன்னார், ஸ்ரீபெரிய பெருமாள், ஸ்ரீசுந்தரராஜன், ஸ்ரீதிருவேங்கடமுடையான், ஸ்ரீதிருத்தங்கல் அப்பன் ஆகிய எம்பெருமாள்கள் பெரிய திருவடி (கருட) வாகனங்களிலும், ஸ்ரீபெரியாழ்வார் சிறிய அன்ன வாகனத்திலும் எழுந்தருளுவர்.

7ஆம் தேதி இரவு கிருஷ்ணன் கோயிலில் சயன சேவை நடைபெறும். ஸ்ரீஆண்டாள் திருமடியில் ஸ்ரீரெங்கமன்னார் சயனத் திருக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

விழா நாள்களில் கோயில் முன்பு உள்ள பிரமாண்டமான பந்தலில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.