ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் அணிந்து கொள்வதற்காக ரூ.5 லட்சம் மதிப்பில் 20 பவுன் எடையுள்ள ஸ்ரீகள்ளழகர் டாலருடன் கூடிய செயின் வியாழக்கிழமை உபயமாக வழங்கப்பட்டது.
இதனை உபயமாக வழங்கிய சென்னையைச் சேர்ந்த நடனக் கலைஞர் ஜாகீர் உசேன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 4 ஆண்டுகளாக இந்தக் கோயிலுக்கு வந்துகொண்டிருக்கிறேன். ஸ்ரீஆண்டாளுக்கு, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் டாலருடன் கூடிய செயின், திருப்பதி திருவேங்கடமுடையான் டாலருடன் கூடிய செயின் தற்போது உள்ளது. ஆனால், மதுரை கள்ளழகர் டாலர் செயின் மட்டும் இல்லை என்று பட்டாச்சாரியார் ஒருவர் என்னிடம் தெரிவித்தார்.
அவர் கூறியதை, ஸ்ரீஆண்டாள் கூறியதாகவே ஏற்றுக்கொண்டு, ஸ்ரீகள்ளழகர் டாலருடன் கூடிய ரூ.5 லட்சம் மதிப்பிலான 20 பவுன் செயினை உபயமாக வழங்கியுள்ளேன் என்றார் ஜாகீர் உசேன். இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் ஸ்ரீஆண்டாளை 24 நான்கு மணி நேரமும் நினைத்து வாழ்வதாகவும் தெரிவித்தார் ஜாகீர் உசேன்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

