சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

திருநள்ளாறு கோயில் தேரோட்டம்

திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி, செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

Updated On :22 மே 2013, 9:12 am

திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி, செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

திருநள்ளாறில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு தனி சன்னதி கொண்டுள்ளார் ஸ்ரீ சனீஸ்வர பகவான்.

இக்கோயிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 7-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்பாள் வீதியுலா நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் செவ்வாய்க்கிழமை காலை 7.40 மணியளவில் தொடங்கியது. பெரிய தேரில் ஸ்ரீ செண்பக தியாகராஜ சுவாமியும், சிறிய தேரில் ஸ்ரீ நீலோத்பாலாம்பாளும் எழுந்தருளினர்.

தொடர்ந்து முக்கிய பிரமுகர்களுக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தப்பட்ட பின்னர், தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள், 2 தேர்களையும் வடம் பிடித்தனர். கோயிலின் கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு வீதிகளின் வழியே தேர் சென்று மாலை 5 மணியளவில் நிலையை அடைந்தது.

÷திருநள்ளாறு சட்டப்பேரவை உறுப்பினர் பி.ஆர். சிவா, மாவட்ட ஆட்சியர் ஜெ. அசோக்குமார், மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் ஏ. ஆன்டோ அல்போன்ஸ், தருமபுர ஆதீனக் கட்டளை விசாரணைப் பிரதிநிதி கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், கோயில் நிர்வாக அலுவலர் ஏ.ராஜராஜன் வீராசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.