காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் தல விருட்சமான மிகப் பழமையான மாமரத்தில் இருந்து ஒட்டு ஏற்படுத்தி உருவாக்கப்பட்ட மாமரம் காய்க்கத் தொடங்கியுள்ளது.
பஞ்சபூத தலங்களில் மண் தலமாக விளங்குவது காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலாகும். இக்கோயிலின் தல விருட்சமாக மாமரம் திகழ்கிறது. இப்போது கோயில் இருக்கும் இந்த இடத்தில்தான் பங்காரு காமாட்சியம்மன் சிவனை திருமணம் செய்ய வேண்டி மண்ணால் லிங்கம் பிடித்து மாமரத்தின் அடியில் அமர்ந்து தவம் இருந்துள்ளார்.
÷பங்காரு காமாட்சியின் தவத்தை மெச்சிய சிவபெருமான் அம்பாளுக்குர் காட்சி தந்து பங்குனி உத்தர நட்சத்திரத்தில் திருமணம் செய்து கொண்டதாக புராணங்கள் கூறுகின்றன.
பங்காரு காமாட்சியம்மன் தவம் இருந்ததாகக் கூறப்படும் மாமரத்துக்கு இப்போது 3,500 வயது இருக்கும் எனக் கருதப்படுகிறது. பல ஆண்டுகளாக இம்மரத்தில் மாங்காய் காய்த்து பக்தர்களுக்கு அரிய பிரசாதமாக கிடைத்
துள்ளது.
÷இந்த ஒரே மரத்தில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கசப்பு ஆகிய 4 சுவைகளுடன் மாங்காய் காய்த்துள்ளது சிறப்பாகும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இம்மரத்தை சுற்றி வந்து, தானாக விழுந்து கிடக்கும் மாங்கனியை பிரசாதமாகச் சாப்பிட்டால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இவ்வாறு சிறப்பு மிக்க இந்த மாமரம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் முற்றிலும் கருகியது. இதைத் தொடர்ந்து இந்த மரத்தை வெட்டி எடுப்பதற்கு முன், அம்மரத்தின் முக்கிய உயிர் செல்களைப் பிரித்து எடுத்து, வேறொரு மாமரக்கன்றுடன் ஒட்டு ஏற்படுத்தி, மீண்டும் புத்துயிர் கொடுக்க முடிவு செய்தனர்.
அதன்படி கடந்த 2002-ஆம் ஆண்டு பழமையான மரத்தின் உயிர் செல்லில் இருந்து மாமரம் உருவாக்கப்பட்டது. இப்போது அந்த மரம் வளர்ந்து பசுமையாகக் காட்சியளிக்கிறது.
இந்நிலையில் அம்மரத்தில் இப்போது மாங்காய்கள் காய்க்கத் தொடங்கியுள்ளன. இதனால் பரவசமடைந்துள்ள பக்தர்கள் மரத்தைத் தினமும் வணங்கிச் செல்கின்றனர். மிகவும் பழமையான மாமரம் காய்ந்த நிலையில் இப்போதும் கோயில் வளாகத்தில் கண்ணாடிப் பேழையில் பக்தர்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

