அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மயான சூறை மற்றும் அம்மன் திருவீதி உலா திங்கள்கிழமை நடைபெற்றது.
திருத்தணி பழைய பஜார் தெருவில் ஸ்ரீ அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் மயான சூறை பிரமோற்சவ விழா நடைபெற்று வருகிறது. கடந்த 8-ம் தேதி கொடியேற்றத்துடன் மயான பிரமோற்சவ விழா தொடங்கியது. இதைத்தொடர்ந்து தினமும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இரவு 7 மணிக்கு உற்சவ அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திங்கள்கிழமை பிற்பகல் 1 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு சிங்க வாகனத்தில் எழுந்தருளினார்.
பிற்பகல் 3 மணிக்கு மயான சூறை நடைபெற்றது. பழைய பஜார் தெரு, பெரிய தெரு, ஆறுமுக சுவாமி கோயில் தெரு வழியாக நந்தி ஆற்றை அம்மன் அடைந்தது. அப்போது ஆற்றில் கூடியிருந்த பக்தர்கள் அம்மன் மீது சுண்டல், கொழுகட்டை ஆகியவற்றை வீசி வழிபட்டனர். பின்னர் பெண்கள் தேங்காய் உடைத்து அம்மனுக்கு பூஜை செய்தனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

