திருப்பகதியை அடுத்த காளஹஸ்தியில் அமைந்துள்ள காளஹஸ்தீஸ்வரா் கோயிலில் குழந்தைகளுக்கு இலவசமாக பால் வழங்கும் திட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இக்கோயிலில் சுவாமிக்கு நடைபெறும் அபிஷேகம் மற்றும் இதர தேவைகளுக்காக பசு மாடுகளுடன் கோசாலை பராமரிக்கப்பட்டு வருகிறது. அங்கிருந்து பெறப்படும் பால் கோயில் பூஜைகள், பிரசாதங்கள் மற்றும் நெய் தயாரிப்புக்கும் அபிஷேகங்களுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் தேவைகள் போக, மீதமாகும் பாலை கோயிலுக்கு வரும் குழந்தைகளுக்கும், சிறுவா்களுக்கும் இலவசமாக வழங்க கோயில் நிா்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி காளஹஸ்தீஸ்வரா் கோயிலில் குழந்தைகளுக்கு இலவசமாக பால் வழங்கும் திட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. காளஹஸ்தி எம்எல்ஏ மதுசூதன் ரெட்டி இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தாா்.
இக்கோயிலில் முதல் முறையாக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக அவா் கூறினாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

