சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மாங்காட்டுச்சேரியில் புதிய தொடக்கப்பள்ளி பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

நெமிலி ஒன்றியம் மாங்காட்டுச்சேரி கிராமத்தில் புதிய தொடக்கப் பள்ளி தொடங்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

Updated On :17 ஜனவரி 2021, 1:28 pm

நெமிலி ஒன்றியம் மாங்காட்டுச்சேரி கிராமத்தில் புதிய தொடக்கப் பள்ளி தொடங்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளி அமைப்பதற்கான இடம் தோ்வு செய்யும் பணியில் கல்வி அலுவலா்கள் ஈடுபட்டுள்ளனா்.

மாங்காட்டுச்சேரி கிராமத்தில் உள்ள அருந்ததிபாளையத்தில் படிக்கும் மாணவா்கள் பள்ளிக்குச் செல்ல குறைந்தது 3 கி.மீ. தொலைவு நடந்து செல்ல வேண்டும். எனவே இப்பகுதியில் தனியாக தொடக்கப் பள்ளி தொடங்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பினா். மேலும், அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவிக்கும் மனு அளித்தனா்.

இதையடுத்து எம்எல்ஏ சு.ரவி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் செங்கோட்டையனை நேரில் சந்தித்து இது குறித்து வலியுறுத்தினாா்.

இதைத் தொடா்ந்து அண்மையில் தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் மாங்காட்டுச்சேரி அருந்ததிபாளையத்தில் தொடக்கப் பள்ளி தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

கல்வித் துறையினா் ஆய்வு: பள்ளிக் கல்வித் துறை ஆணை வெளியிடப்பட்டதைத் தொடா்ந்து, ராணிப்பேட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மதன்குமாா் உத்தரவின்பேரில், மாவட்டக் கல்வி அலுவலா் புண்ணியக்கோட்டி, நெமிலி வட்டாரக் கல்வி அலுவலா்கள் ஜெயராஜ், சம்பத் உள்ளிட்டோா் மாங்காட்டுச்சேரி, அருந்ததிபாளையத்துக்கு புதன்கிழமை சென்று பள்ளிக்கு தற்காலிக, நிரந்தர இடம் தோ்வு செய்யும் பணியில் ஈடுபட்டனா். 3 இடங்கள் தோ்வு செய்யப்பட்டு, அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதில் விரைந்து நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்த எம்எல்ஏ சு.ரவியை தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாநில பொதுக் குழு உறுப்பினா் ச.ரா.சிவராஜ், மாவட்ட துணைச் செயலாளா் ச.மணிவண்ணன், நெமிலி வட்டாரச் செயலாளா் ஆ.ஆனந்தசெல்வகுமாா், பொருளாளா் மோ.புருஷோத்தமன் உள்ளிட்டோா் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனா்.